BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவுகள் மோசமடைந்து இருந்தன. இந்தியா முகமது யூனுஸ் விஷயத்தில் இவ்வளவு கசப்புடன் நடந்து கொண்டது ஏன்? முழு பின்னணி
டியாகோ கார்சியா: இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த தீவு பற்றி பிரிட்டனை டிரம்ப் எச்சரித்தது ஏன்?
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டத்தை மொரீஷீயஸிற்கு விட்டுக் கொடுக்க, டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காணொளி, காணொளி: தமிழகம் போலவே பஞ்சாபிலும் நடக்கும் மாட்டு வண்டி பந்தயம், கால அளவு 1,29
தமிழ்நாட்டில் நடக்கும் ரேக்ளா பந்தயத்தை ஒத்த ஒரு பாரம்பரிய விளையாட்டு பஞ்சாபில் நடைபெறுகிறது.
நேரலை, இரான் மீது ராணுவ நடவடிக்கையா? - "10 நாட்களில் தெரியும்" என டிரம்ப் கருத்து
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை: சாம்பியன் அணிகளை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே - சூப்பர் 8 சுற்று எப்படி நடைபெறும்?
சூப்பர் 8 பிரிவில் இந்த இந்த அணிகள் தான் இடம்பெறும் என்று உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருந்த அணிகளுக்கு முன்கூட்டிய ஒரு தரநிலை (pre seeding) கொடுக்கப்பட்டது.
இடைநிலை உண்ணாவிரத முறை எடையைக் குறைக்க உதவாதா?
அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்கள், எடையைக் குறைக்க, இடைநிலை உண்ணாவிரதம் என்றழைக்கப்படும் விரத முறையைப் பின்பற்றுவது பெரியளவில் பலனளிக்காது என்று ஒரு பெரிய மதிப்பாய்வு தெரிவிக்கிறது.
இஸ்ரேலில் இந்தியர்கள் மீது "இனவெறித் தாக்குதல்" - இஸ்ரேல் கூறுவது என்ன?
இஸ்ரேலில் பாலத்தீன தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தியத் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'10 ஆண்டு கழித்து' - தேமுதிக வருகையால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பா?
சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களை தி.மு.க குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், 'கட்சிகளின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தலைமை முடிவெடுக்கும்' என தி.மு.க கூறுகிறது. தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா?
மலேசியா வாசுதேவன் பாடிய 'மயங்க வைக்கும்' 10 பாடல்கள்
மலேசியா வாசுதேவனின் நினைவு நாளை முன்னிட்டு, மலேசியா வாசுதேவனின் மகளும் பாடகியுமான பிரஷாந்தினி மற்றும் மகனும் பாடகருமான யுகேந்திரன் ஆகியோரிடம், காலம் கடந்து நிலைத்திருக்கும் 10 அவர்களது தந்தையின் பத்து பாடல்கள் குறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பேசியது.
வங்கதேச ஆளும் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டவர் வெளியுறவு அமைச்சரானது எப்படி?
பல விவகாரங்களில் பிஎன்பி-யின் உயர்மட்டத் தலைவர்களும்கூட ரஹ்மானை விமர்சிப்பதைக் காண முடிந்தது. இவர்கள் அவரை விமர்சித்தது மட்டுமல்லாமல், அவரை இடைக்கால அரசாங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆங்கிலேயர் தங்கம் எடுத்த பகுதிகளில் சட்டவிரோத 'தங்க குழிகள்' - நீலகிரியில் நடப்பது என்ன?
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தங்கச்சுரங்கம் செயல்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதற்காக குழி தோண்டுவது சமீபமாக அதிகரித்துள்ளது. இதன் பின்னணி என்ன?
பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் கைது - இதுவரை தெரிந்தது என்ன?
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
எகிப்தில் மன்னர் பள்ளத்தாக்கில் கிரேக்கத்துக்கு மேலே தமிழை பொறித்த 'சிகை கொற்றன்' யார்?
எகிப்தில் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கல்லறைகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை எழுதியது யார்?
அரவிந்தர் கோஷ் புதுச்சேரி வந்தது ஏன்? சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதியான கதை
1893-ல் அரவிந்தர் இந்தப் பெயரைத் தனது பெயரிலிருந்து நீக்கினார். 1879-இன் மத்தியில், கிருஷ்ண தன் தனது முழு குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.
உலகளவில் பாதி: இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் பாம்பு கடித்து பல ஆயிரம் பேர் பலியாக என்ன காரணம்?
மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 பேர் பாம்புக்கடியால் உயிர் இழக்கின்றனர். இது உலகெங்கிலும் ஏற்படும் இறப்புகளில் பாதியாகும். இந்தியாவில் பாம்புக்கடியால் அதிகம் பேர் உயிரிழக்க என்ன காரணம்?
பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?
உலகின் பல பகுதிகளில் பெரிய மார்பகங்கள் இருப்பது கவர்ச்சிகரமான விஷயமாக கருதப்பட்டாலும், உண்மை கடினமானதாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் அது குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
கோவையில் காண்டாமிருகம் வாழ்ந்ததா? தொல்லியல் ஆய்வில் கிடைத்த ஆதாரம்
சமீபத்தில் கோவை அருகே நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த எலும்பு காண்டாமிருகத்துடையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இது இன்னமும் நிரூபிக்கப்ப வேண்டியது உள்ளது என விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வடமொழிப் பெயர் சர்ச்சை: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன?
சோழ மன்னர்களின் காலம், அந்தக் காலத்தில் இருந்த சமூக அமைப்பு, நிலவுடைமை, சமூகத்தின் எந்தப் பிரிவுக்குச் சாதகமாக இருந்தார்கள் என்பதெல்லாம் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துவருகின்றன.
ரூ.100 கோதுமை திருடியதாக 45 ஆண்டுக்கு முந்தைய வழக்கில் ஒருவர் கைது - என்ன நடந்தது?
இந்த வழக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாவட்டத்தின் பல்க்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்சமுந்த் காகட் கிராமத்தில் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையைத் திருடியது தொடர்பானது.
சௌதி அரேபியா லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க தீர்மானித்தது ஏன்?
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. நாட்டின் இந்த விலைமதிப்பற்ற விலங்குகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
வங்கதேசத்துடன் அமெரிக்கா செய்த வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
அமெரிக்கா - வங்கதேசம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான சில மணிநேரங்களிலேயே, இந்திய ஜவுளி மற்றும் பருத்தி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆடை சந்தையில் இந்தியாவின் நிலை பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
சார்ல்ஸ் டார்வின் 'கடவுளை கொன்று' பரிணாம கோட்பாட்டை கண்டுபிடிக்க வித்திட்ட பீகிள் கடற்பயணம்
இயற்கை விஞ்ஞானி சார்ல்ஸ் டார்வின் தனது பரிணாமவியல் கோட்பாட்டைக் கண்டுபிடிக்க தொடக்கப் புள்ளியாக இருந்தது பீகிள் கடற்பயணம். அந்தப் பயணத்தில் அவர் என்னவெல்லாம் பார்த்தார், எப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்றார்?
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையறை அற்ற வேலைக்கான உரிமம் பெறுவதற்கான கால அளவு 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளர். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


